search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்கி டாக்கி"

    நாமக்கல் போலீஸ் நிலையத்தில் 2 வாக்கி டாக்கிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாமக்கல்:

    போலீஸ் துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு இன்ஸ்பெக்டர் மற்றும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் தகவல் பரிமாற்றத்துக்காக வாக்கி டாக்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    நாமக்கல் போலீஸ் நிலையத்தில் சுமார் 10 வாக்கி டாக்கிகள் உள்ளன. இந்த வாக்கி டாக்கிகள் இன்ஸ்பெக்டர் பொறுப்பில் பராமரிப்பில் இருக்கும்.

    இந்த நிலையில் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் 2 வாக்கி டாக்கிகள் திடீரென மாயமாகிவிட்டன. இதனால் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வாக்கி டாக்கிகளை திருடிச் சென்றது யார் என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறும்போது, போலீஸ் நிலையத்தில் 2 வாக்கி டாக்கிகள் காணாமல் போய் உள்ளன. இவை சர்வீஸ் செய்ய அனுப்பப்பட்டுள்ளதா? அல்லது வேறு போலீஸ் ஸ்டேசன்களில் மாறி சென்றுள்ளதா? என விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

    இச்சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    தேனாம்பேட்டையில் போலீஸ்காரர் ஒருவர் வாக்கி டாக்கியில் விடுமுறை கேட்ட சம்பவம் உயர் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. #TNPolice
    சென்னை:

    சென்னையில் நேற்று இரவு போக்குவரத்து போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளின் பயன்பாட்டில் உள்ள வாக்கி டாக்கியில் வழக்கத்துக்கு மாறாக போலீஸ்காரர் ஒருவர் பேசுவது எதிரொலித்தது.

    எப்போதும் உயர் போலீஸ் அதிகாரிகள் வாக்கி டாக்கியில் உத்தரவை பிறப்பிப்பார்கள். இதனை பணியில் இருக்கும் போலீசார் ஆமோதிப்பார்கள். ஆனால் நேற்று வாக்கி டாக்கியில் பேசிய போலீஸ்காரரோ தனக்கு தனது மேல் அதிகாரி விடுமுறை தர மறுக்கிறார் என்று கதறினார்.

    எனது தாயின் சாவுக்கு கூட விடுமுறை தர மறுக்கிறார்களே என்று அவர் ஆதங்கப்பட்டார். இதனை கேட்டு உயர் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    குறிப்பிட்ட போலீஸ்காரர் விடுமுறை கிடைக்காத விரக்தியின் விளிம்பில் அதுபோன்று வாக்கி டாக்கியில் பேசியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் தேனாம்பேட்டையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றின் அருகில் இருந்தே போலீஸ்காரர் வாக்கி டாக்கியில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகிறார்கள். #TNPolice
    ×